தென்திருவண்ணாமலை தலவரலாறு

Web Design SEO India Web Design Singapore SEO Singapore SEO Singapore

தொன்மையான வரலாறு கொண்ட திருத்தலம்  மதுரையை ஆண்டு வந்த கூன்பாண்டியன் சமணத்தைப் பேணிவந்தான் தம் மக்கள்        யாவரையும் சைவத்திலிருந்து சமணர்களாக மாறுமபடி சமணர்கள் பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்தனர். மன்னனும் இதை கண்டும் காணாது இருந்து வந்தான்.

இந்நிலையில் தெய்வத்திருவுருவம் ஞானசம்பநதருக்கு இசசெய்தியை சொல்லி அனுப்பினார். மதுரை அரசி மங்கையற்கரசி, சைவத்திதல் நம்பிக்கை கொண்டவர் ஆதலால் ஞானசம்பந்தர் ஒருவரால் தான் இந்த இக்கட்டான  சூழ்நிலையிலருந்து சைவத்தைக் காக்க முடியும் என எண்ணினார்.

அரசியின் வேண்டுகொளை ஏற்ற ஞானசம்பந்தர் மதுரையை வந்தடைந்தார். இதை அறிந்த சமணர்கள் சிலர் ஞானசம்பந்தர் தங்கியிருந்த கொட்டகைககு இரவில் தீவைத்து விடடனர்.  இறையருளாள் ஒரு துன்பமுமின்றி உயிர்தப்பிய திருஞானசம்பந்தர் சற்று கோபம் கொண்டு, என் இருப்பிடத்தை
எரிய செய்ததுபோல் இந்நாட்டு மன்னனின் மேனியும் வெப்பசூலை நோய் தாக்கிக எரியட்டும் என சாபமிட்டார்.

கண்களில் கருணையும், இதயத்தில் ஈரமும் கொண்டவர்கள் மகான்க்ள அனைவருமே  என்றாலும, முற்றும் துற்நத முனிவரென்றாலும் முள் எடுத்துக்குத்தினால்…..வலிக்கத் தானே செய்யும், வினைக்கு எதிர்வினை வந்து தானே தீரும.மன்னன் கூன் பாண்டியன் கடுமையான வெப்ப சூலை நோயால் சொல்லொண்ணா துயரடைந்தான்.

மன்னனுக்கு அரண்மனை வைத்தியர்கள் ம்டடுமல்லாது யார்யாரோ வந்தார்கள்,வைத்தியங்கள் பலவிதங்களில் நடந்தன ஆனால் பயன் தான் ஒன்றுமில்லை நாளுக்கு ;நாள் நோயின் கடுமை கூடியதே தவிர குறைநதபாடில்லை.

தன் அருட்சக்ததியால் மன்னனின் நோயை தீர்ப்பதாகக்கூறி சமணர்கள் முய்னறார்க்ள இதிலும் பய்ன ஒன்றுமில்லை.  இந்நிலையில்; அரசி மங்கையர் கரசியார் மன்னனிடம் ஞானசம்பந்தரின் அருட்திறத்தை எடுத்துக்கூறி அவரை அழைத்து வந்தால் நோய் நொடிப் பொழுதில் காணாமல் போகும் என்று கூறினார்.

ஒருவாறு இதையேற்ற பாண்டியன் திருஞானசம்பந்தரை பணிந்து நின்றான். சிவனடியார்களுககு அடியேன் என்ற பணிவுடன் கனிவும் கருணையும் கொண்ட ஞானசம்பந்தர் எல்லாம் வல்ல இறைவனான சிவனை மனதில் நிறுத்திதசிறிது திருநீற்றை கூன்பாண்டியன் உடலில் பூச  உடலில் உள்ள வெப்ப நோயும் உள்ளத்தில் இருந்த அறியாமையும் ஒருசேர நீங்கப்பெற்றான்.

மன்னனுக்கு நோய் தீர்ந்தது என்றாலும் பூரண குணம் ஏற்பட வேண்டமானால் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனை தரிசனம் பெற்று வா என்று நல்லாசி வழங்கினார்.

குரு வாக்கை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்ட மன்னன், சைவனாக மாறி சமணர்களின் தொடர்பை துண்டித்துக் கொண்டு படை சூழ திருவண்ணாமலை புறப்பட்டார். புறப்பட்ட இடத்திலிருந்து 241 கல் ;தொலைவு கடந்தவுடன் எழில் கொஞ்சும் ஓர் இடத்ததைக் கண்டான்

அவ்விடத்தை அடைந்தவுடன் இறைநினைவும் அமைதியும் அவன் மனதில் குடிகொண்டது.  இயற்கை அன்னை அவ்விடத்தை தன் அழகிய கைகளால் எழில் மிக்க ஒரு சிற்பம் போல செதுக்கியிருந்தாள். பச்சைபசேலென வயல வெளிகள, கனிவகை தரும் நெடு மரங்கள் வற்றாத நீர் பெருக்கும் குளங்கள், வற்றாத வாய்க்கால்கள் ஆநிரை மேயும் வயல், புல், வெளிகள் எவ்விதையையும் ஏற்றுக் கொண்டு உயிர்கொடுக்கும் வளமான மண், என நஞ்சை , புஞ்சை, நெல், கரும்பு, சோளம், கம்பு என எல்லா பயிர்களும் விளையும் அற்புதமான பூமியாக அது இருந்தது.

இயற்கை வளமும், எழிலும் கொண்ட அவ்விடத்தின் பெயர் என்ன? எனவினவினான் மன்னன் ஆம்பல் வனம் என்றனர் அவ்வூர்   வாசிகள்.(இ;னறு இது காலத்தால் மருவி ஆம்பலாபட்டு என அழைக்கப்படுகிறது)

அந்த இடத்தின் மகிமையை ஆம்பல் மலர்கள் கொண்ட நீர்க் குளங்கள் நிறைந்த பகுதியாகையால் இபபெயர் பெற்றதையும அறிந்து மகிழ்ந்தான். உண்ணாமுலையன்னையின் திருமுகத்தையும் அண்ணாமலையாரின் எல்லையில்லா கருணையையும் மென்மையும் நினைவுபடுத்தும் இவ்வாம்பல் வனத்தில் அண்ணாமலையாருக்கு ஓர் ஆலயம் அமைத்தால் என்ன என்று எண்ணினான் மன்னன். அதற்கு செயல் வடிவம் கொடுத்தான் இறைவன். அன்று இரவே கனவில் எல்லையில்லா கருணை கொண்டு அத்தெய்வம் எழுந்தருளி, ஆலயம் அமைக்க அருள்பளிக்க ஆணையிட்டது.

ஆண்டவனின் கருணையையே பெற்றுவிட்ட மன்னன்  தன் எண்ணப்படி அருமையானதொரு  ஆலயத்தை அமைத்தான் திருவண்ணாமலைக்கு ஈடாக கூறப்படும் இவ்விடத்தை ஆம்பல் வனத்தில் தென் திருவண்ணாமலையாக அமைத்தான் சமதளத்தில் இயற்கை சூழ்ந்த பரப்பில் இத்திருக்கோயில் திருவண்ணாமலையோ கடல் மட்டத்திலிருந்து 167.44மீ உயரத்தில் அமைந்துள்ளது.

கல்வெட்டு கூறும் செயதி

திருவண்ணாமலையில் இரண்டாம பிரகாரத்திலும் தஞ்சை பெரிய கோயிலின் உள் பிரகாரத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் மண்டபத்திலும் ஆம்பல் வனத்தில் அண்ணாமலையாரின் மகிமையும் பாண்டியனின் பெருமையும் பாண்டியன் ஆற்றிய சைவத்தொண்டும் கல்வெட்டு கூறும் செய்தியாக அறியலாம்.

தன்னிகரில்லா தரும பூமியாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது இத்திருத்தலமாகும். வேதாரண்யம் ராமேஸ்வரம் திருச்செங்கோடு வட திருவண்ணாமலை ஆகிய சிவத்தலங்களின் மையத்தில் இத்திருத்தலம் அமைந்தள்ளது. இன்னொரு சிறப்பாகும்.

திருவண்ணாமலையில் மேற்குத்திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்று உண்டு. அதன்கண் விரும்பி மூழ்கினால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செயயும் என்று சாஸ்திரம நூல்கள் கூறுகின்றன.

அதே போன்று தென் திருவண்ணாமலையில் மேற்கில் வருண தீர்த்தம உண்டு.திருவண்ணாமலையில் நான்கு குன்றுகள் உள்ளன. அதே போன்று தென் திருவண்ணாமலையிலும்  நான்கு கமலாலயங்கள் உண்டு. ஆகையால் இதை தென் திருவண்ணாமலை என்று கூறுகின்றனர் ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள்.

வரலாற்று சிற்பபுமிக்க இராஜ கோபுரம் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மூன்று மாவட்டத்தில் இல்லாத பெருமையாக, அதி அற்புதமான திருப்பணி 126அடி உயரம் கொண்ட 7 நிலை இராஜகோபுரம் அமைக்கக்பப்டடு வருகிறது. இதில் இன்னொரு சிறப்பாக எங்குமே கண்டிராத ஒரு அற்புத காட்சியாக நீருக்கடியில் நவநாயகர்கள் (நவகிரகங்கள்) மற்றும் கைலாயம் அமைப்புகள்
ஆகிய ஆகம விதிமீறாமல் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

 

அஷ்டலிங்கத்தின் மகிமைகள்

இந்தரலிங்கம்: கிழக்கு திசை

விண்ணுலகில் மன்னனாக விளங்குகின்ற இந்திரன் சிவபெருமானை வணங்கி வழிபாடு செய்கிறான். ஐராவதம் எனும் யானையைகத் தன்னிடம் வைத்து எல்லாவ்றறையம் எல்லா ; மக்களும் வழங்கிக் கொண்டிருக்கின்றனான். அறியாமை என்னும் இருள் நீக்கி ஒளி தந்து கிழக்கில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்.

அக்னிலிங்கம்: தென்கிழக்கு திசை

அனைத்து ஜீவராசிகளும் தேவையானது அக்கினி ஆகும். ஏழகைகளும் ஏழு நாக்குகளும் கொண்ட அக்கினி பகவான் வேள்வித்தீயின் தெய்வம், மனிதர்களின் வேண்டுதலை இறைவனிடம் வழங்குபவர். அக்கினி, விலங்குகள், தாவரங்கள் போன்ற ஜீவராசிகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவர்.

எமலிங்கம்: தென் திசை

மனிதன் செய்யும் பாவ புண்ணியற்களுககு  ஏற்ப அவனின்ன ஆத்மா தூய்மை அடைகிறது மீண்டும் பிறவாமல் இருப்பபதற்கு வழி வகுககும் இவர் தெய்வமாக இருந்தாலும் நமது உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்து மாயயில் சிக்கி தவித்து அழிவை நோக்கி போனால் ஆத்மாவிற்கு பிறவியும், மறுபிறவியும் மாறி மாறி வரும் என்பதை உணர வைப்பவர் தீர்ப்பு அளித்து தண்டனை கொடுப்பவராயினும் அவர் நேர்மையானவர்.

நிருதலிங்கம: தென்மேற்கு திசை

மனிதன் செய்யும் துன்ப காரியங்களுககு விடுதலைபெற ஸ்ரீநிருதியை வழிபட்டால் சிறப்பு ஆகும். இப்பிறவியில் பிறருக்கு தீங்கு நினைக்காமல் இருந்தால் உங்களுக்கு நல்லதே செய்வார்.

தினந்தோறும் ஸ்ரீநிருதியை நினைத்து வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் கிடைக்கும்.

வருணலிங்கம்: மேற்கு திசை

வருண பகவான் ;அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான நீர் மூவுலகத்தில் உள்ள நீருக்கெல்லாம் அதிபதி உலகையே காலத்திதற்கு ஏறப முனினன்று நடத்துபவர். மண்ணுலகில் உள்ள நதிகள், கடல்க்ள, பாயும் ஆறுக்ள, நீர் நிலைகளுககெல்லாம் அதிபதி, அவரை வணங்கினால் விவசாயம் செழித்து வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

வாயுலிங்கம்: வடமேற்கு திசை

இவரின் தோற்றமே உயிர் காற்றுதான். அனைத்து ஜீவராசிகளுககும ஜீவன் உலகின் இய்ககத்திற்கு உறுதுணை புரிகிறார். எங்கும் வியாபித்து இருக்கிறார். அசைவும் இவரே நிலைத்து இருப்பவரும் இவரே உயிர்களுக்கு ஜீவன் அளிக்கும் சுவாசத்தை கொடுப்பபவரும் இவரே.

குபெரலிங்கம்: வடக்கு திசை

செல்வங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்டவர் புண்ணிய ஜனநாயகன் சிவனுக்கு நெருக்கமாக இருப்பதால் இவரை சிவ சகா என்றும் கூறுவர். செல்வததை அவரவர் மனம்போல் வளரச் செய்பவர். வாரி கொடுக்கும் வள்ளல் இவரே.

ஈசரினயலிங்கம்: வடகிழக்கு திசை

சிவ சொறுபமாக உடல் முழவதும திருநீரு அணிந்து சிறந்த மேனியுடன் காட்சி கொடுப்பவர். எல்லோரின் துன்பங்களை தான் ஏ;றறுக்கொண்டு மற்றவாகளுக்கு இன்பத்தை வழங்குபவர் பூதகனங்கள் சூழ்ந்திருக்க ஜடாமுடியும். முக்கண்ணாலும் சிவசங்கரனாக காட்சி தருபவர். புலித்தோலில் அமர்நது தவம் புரியும் சிவனுடைய ஏழு ருத்திரர்களில் ஒருவராக காட்சி தருபவர்.

தென் திருவண்ணாமலையை சுற்றி அமைந்துள்ள இந்தஅஷ்டலிங்க பாலக அமைப்பு சிவபெருமானை வழிபாடு செய்வதாக உள்ளது. அண்ணாமலையாரின் அருளாட்சிக்குடபட்ட இக்கிராமங்களில் இன்றளவும் தன் தலைபிளளைகளுககு அருணாசலம  அண்ணாமலை , அப்பாவு, சிவசுப்னையன், சிவபுண்ணியம் என சிவனின் திருபபெயர்களே கிராம்தில் வைத்து வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாலத்தின் தெய்வங்கள் இறைவன் அண்ணாமலையார் இறைவி உண்ணாமுலையம்மன் வலதுபுறம் மங்கள கணபதியும் இடதுபுரம் வள்ளிதேவசான சுப்பிரமணியரும் பக்கவாடடில் ஞான சண்டிகேஸ்வரரும் அஷ்டதுர்கையும் ஞானகுருவும் லிங்கோத்பவர் பிரமேஷ்வரரும் கருவரைக்கு எதிர்புரம் ந்நதியம்பெருமானும் திருக்கோயிலில் ஈசானியத்தில் உமையாளுடன் சொர்ண பரைவர் நவிகரகங்கள், ஆகிய தெய்வங்கள் வரும் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

திருக்கோயிலின் முன்வாயிலில் இராஜகோபுரமும் அதற்கு முனவரியலில் இடதுபக்கம் இடும்பனும் வலது பக்கம் கருப்பு சாமியும் இராஜகோபுரத்துக்கு எதிர்புரம் உஜ்யானி அம்மனும் வரிவார தெய்வங்களாக அருள்பாலித்து வருகிறார்கள்.

மேலும் இத்திருத்தலத்தில் 27 நட்சத்திரத்திரங்களுக்குரிய வழி தல விருச்சகங்கள் உள்ளன அந்தந்த நட்சத்திர காரர்பனும் அவர்களுக்குரிய நட்சத்திர விருட்ச்சகத்தை வழிபட்டால் நட்கத்திர தோசம் விலகும்.

இத்தெய்வங்கள் வராக்கடன், தொடாக்கடன், தீராக்கடன் என கடன் தொல்லைக் கொண்டோர்க்கு பரிகாரத்தலமாக இவ்விடம் விளங்குகிறது. தென்திருவண்ணாமலை தொழுவர் வினை வழுவா வண்ணம் ஆறுமே என்கிறார் நாவுக்கரசர்

வினை தீர்த்து நலங்கொடுக்கும் கடன் தீர்த்து வளஞ்சேர்க்கும் பிள்ளைபேறு தந்து தொல்லை மிகத் தொலைக்கும் நல்லனயாவும் தந்து அருள் பாவித்து வருகிறார்

இவரது மகிகை வெகுவிரைவில் நடமுறை உலகம் காண உள்ளது தன்காலுக்கடியில் காத்துநிற்கும் கனகத்தை மீட்டெடுத்து வரும்நாளில் கல்லம் கை கூடும் காவலன் கை கூப்பி காட்டுவான் மகிமையுடன் கோபுரம் எட்டுதிக்கும் கட்டியாளும் அதிகை கொண்ட தெய்வங்கள் புட்டுக்கு மண்சுமந்தபரமனது அடிபற்றி குடிவைத்த
கூன்பாண்டியன சோழன் கோச்செங்கணன் மைத்துனன். கூன்பாண்டியன்நற்புகழ் வாழ்வளிக்கும் தென்திருவண்ணாமலையாம்
அண்ணாமலைகயாருக்கு அபிஷேகம் செய்தால் புண்ணியம் தலனலகும் புல்லினால் கோயில் அமைத்தால கோடி வருடமும் மண்ணால் ;அமைத்தால் பத்துகோடி வருடமும் செங்கல்கொண்டு அமைத்தால் நூறுகோடி வருடமும் இறைவனின் அருகில் அதாவது கயிலாயத்தில் இருக்கலாம் என்கிறது. ஆனால் கருங்கல்லினால் அமைத்தாலோ

உமையொருபாகனாகிய அண்ணாமலையாரின் திருவழயிலேயே கிடந்து சொல்லில் அடங்கா சுகம்பெறுவர்.

அதி அற்புதமாக

சிவன் கோயிலகளில் வடகிழக்குப் பகுதியில் காலபைரவரை
தரிச்சிக்கலாம். சூரியன்,பைரவர்,சனி பகவான் என்ற வரிசையில் அருள்வதும் உண்டு சிவபெருமான் வீரதீரச் செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்பர். பாரத தேசத்தில் ஐந்தே இடங்களில் இதுவும் ஒன்றாக தனிச்சிறப்பாக வைரவியுடன் அருள்பாலிக்கிறார்.

சொர்ண பைரவரின் மகிமை

சொர்ண பைரவரின் திருவுருவத்தில் பனிரெண்டு ராசிகளும் அடங்கியுள்ளன. தலையில் மேஷம், வாய்ப் பகுதியில் ரிஷபம்,
ககைளில் மிதுன்ம, மார்பில் கடகம், வயிற்றுப் பகுதியில் சிம்மம்,
இடையில் கன்னி, புட்டத்தில் துலாம், லிங்கத்தில் விருச்சிகம்,
தொடையில் தனுசு, முழங்காலில் மகரம், காலில்கீழ்பகுதியில் கும்பம், அடித்தளங்களில் மீனம், ஆகியராசிக்ள அமைந்துள்ளளதாக சாதக நூல்க்ள கூறுகின்றன.

சொர்ணபைரவர் பாம்பை பூணூலாக கொண்டவர், சந்திரனை சிரசில் தாங்கியவர் சூலம்,மழு, பாசம், தணடம் கையில், மதுக்கலசம் ஏந்திக் காட்சி தருபவர். தன் துணைவியை இடது பக்கம் தாங்கிய சொர்ண ஆகாச பைரைவர் மிக மிக விஷேசதட nhடாரகய ஆனந்த சொரூபி தென்திருவண்ணாமலையில் (ஆம்பல் வனத்தில்) அருள்பாலக்கிகறார். இந்த பினரெண்டு ராசிகாரர்களும் தேய்பிறை அஷ்டமி திதியில் அபிஷேக ஆராதனை செய்தால் இல்லத்தில்
சுபகாரியங்கள் நிகழும். சகல சௌபாக்கியங்களும் இல்லங்களுக்கும் வந்து சேர உறுதுணை செய்பவர்.

நன்றியுடன்,

இத்திருத்தலத்தின் பெருமைகளை நாளும் ஒளியேற்ற வழிபட்டு வரும் மெய்யன்பர்களையும், திருப்பிணக்கு வாரி வழங்க உள்ள வள்ளல் பெருமக்களையும், இராஜகோபுரம் உயர்வதற்கு அள்ளி தரஉள்ள அத்துணை சிவனடியார்களின் சிரமதானம், பொருள்தான்ம கொடுத்து வளர்சிச்ககு உதவியுள்ள கிராம மக்கள் வெளிய+ர் அன்பர்க்ள ;அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறும்

ஆலயத்திருப்பணிக்குழு மற்றும் இராஜகோபுரத்திருப்பணிக்குழு
தென்திருவண்ணாமலை எனும் ஆம்பல்வனம்

குறிப்பு: பஸ் வழித்தடம்

தஞ்சாவ+ர பட்டுககோட்டை (வழி: பாப்பநாடு) பாப்பநாடடிலிருந்து 4கல் தொலைவில் உ;ளளது தென்திருவண்ணாமலை ஆம்பலாபட்டு (ஆம்பல்வனம்) பஸ் நம்பர்: 19,3

இப்படிக்கு திருப்பணிக்குழு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தென்திருவண்ணாமலை ஆம்பலாபட்டு அஞ்சல்-614 626

குறிப்பு: பஸ் வழித்தடம்

சென்னை 325 கி.மீ

புதுச்சேரி 177 கி.மீ

கும்பகோணம் 40 கி.மீ

பெங்களுர் 382 கி.மீ

கோயம்புத்தூர் 259 கி.மீ தஞ்சாவூர்

திருச்சி 54 கி.மீ பாப்பநாட்டிலிருந்து 2 கி.மீ

தென்திருவண்ணாமலை

மதுரை 158 கி.மீ பட்டுக்கோட்டை

புதுக்கோட்டை 56 கி.மீ