ஆம்லாப்பட்டு தென்திருவண்ணாமலை அன்புடன் வரவேற்கிறது
பட்டுக்கோட்டையை அடுத்த பாப்பாநாடு அருகில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அண்ணாமலையார் கோவில் மிகச்சிறந்த காலசர்பபதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலை என்றழைக்கப்படும் உண்ணாமலையார் சமேத அண்ணாமலையார் வீற்றிருக்கும் இக்கோவில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் இக்கோவில் தீராத கடன்களை எல்லாம் தீர்த்து வைப்பவர் என்று பக்தர்களால் நம்பிக்கையுடன் கூறப்படுகிறது.
பண்டைய காலத்தில் சுந்தரபாண்டிய மன்னன் போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக இக்கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில் உள்ளே கல் தூணில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருச்செங்கோடு, வேதாரணியம் ஆகிய ஊர்களின் நடுவில் இக்கோவில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அழகுற அமைக்கப்பட்ட அம்மன் சன்னதி, மடப்பள்ளி, சனீஸ்வரர், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் தனிச்சிறப்பாக கல்விக்கு அதிபதியாக விளங்குகிற ஞான சண்டிகேஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. மேலும் செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய தேவியுடன் கூடிய சொர்ண ஆதர்ஷண பைரவர் சன்னதியும் தனியாக உள்ளது.
இக்கோவிலுக்கு 126அடி உயரமுள்ள கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்தலத்தில் அமர்ந்து திருமகேந்திர சாமிகள் அவர்கள் அருள்வாக்கு மற்றம் கோவில் கோபுரம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மேலும் கூறியதாவது,
தீராத கடன்கள் தீர்ப்பவர் மற்றம் கால சர்ப்ப தோஷம் பரிகார ஸ்தலமாகும். சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 126 அடி உயரமுள்ள கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊர் பெரியவர்கள் மற்றம் கிராம மக்களின் சிரம தானத்தாலும் பொருள் உதவியாளும், கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள உயரமான கோபுரங்களில் இக்கோபுரமும் ஒன்றாக அமைய உள்ளது. குழந்தை இல்லாதவர் இங்குள்ள அண்ணாமலையாரை வேண்டிகொண்டு மண் சோறு சாப்பிடுவதால் குழந்தை வரம் கிடைக்கிறது.
தைப்பூசம் அன்று கோவில்களில் சிறப்பான முறையில் அன்னதானம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.